கேரளா ஸ்டைல் பச்சை பயறு தால்
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* பாசிப் பருப்பு - 1/2 கப்
* சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்து பொடியாக நறுக்கியது)
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
*
உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பச்சை பயறை நீரில் குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் பச்சை பயறை நீருடன் போட்டு, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் பாசிப் பருப்பை கழுவிப் போட்டு, சிறிது நீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4
விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும்.
* பிறகு சின்ன வெங்காயத்தை சேர்த்து, மென்மையாக வதக்க வேண்டும். அதன் பின் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதே சமயம் மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும்
சீரகத்தைப் போட்டு நீர் சிறிது சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொண்டு, பருப்புடன் சேர்க்க வேண்டும்.
* பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கேரளா ஸ்டைல் பச்சை பயறு தால் தயார்.
No comments:
Post a Comment