க்ரீமி சிக்கன் கிரேவி
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 500 கிராம்
* தயிர் - 2 கப்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 8 பல் (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* காய்ந்த வெந்தயக் கீரை - 1 டீஸ்பூன்
*
பிரஷ் க்ரீம் - 1/2 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து பிசைந்து, ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, சிறிது நீர் சேர்த்து 3-4 நிமிடம் வேக வைக்கவும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி, பின் எஞ்சியிருக்கும் சிக்கன் ஊற வைத்த கலவையை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் மூடி கொண்டு மூடி வைத்து குறைவான தீயில் குறைந்தது 25 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
வேண்டுமானால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்.
* சிக்கன் நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் பிரஷ் க்ரீம், மிளகுத் தூள் மற்றும் காய்ந்த வெந்தய கீரை சேர்த்து கிளறி ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான க்ரீமி சிக்கன் கிரேவி தயார்.
No comments:
Post a Comment