chettinad-beans-cauliflower-poriyal- செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல் - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 22 August 2021

chettinad-beans-cauliflower-poriyal- செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்

Chettinad Kathirikai Chops Recipe In Tamil

செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்


தேவையான பொருட்கள்:

* காலிஃப்ளவர் - 1

* பச்சை பீன்ஸ் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)

* கடுகு - 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் காய்கறிகளை சரியான அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் காலிஃப்ளவர் மற்றும் பீன்ஸ் இரண்டையும், கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து மென்மையாக வேகும் வரை வேக வைத்து இறக்கிக் கொண்டு, நீரை வடிகட்டிவிட வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* அடுத்து அதில் கறிவேப்பிலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் வேக வைத்துள்ள காய்கறிகளையும் சேர்த்து, உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும்.


* காய்கறிகளானது மசாலாவுடன் நன்கு ஒன்று சேர்ந்ததும், ஒரு 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு காலிஃப்ளவர் பீன்ஸ் பொரியல் தயார்.

No comments:

Post a Comment