பீர்க்கங்காய் கிரேவி
தேவையான பொருட்கள்:
* பீர்க்கங்காய் - 4 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல்
* பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெந்தய பவுடர் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு பவுடர் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
* வரமிளகாய் - 1
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பீர்க்கங்காயின் தோலை சீவி நீக்கிக் கொண்டு, துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, பின் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் பூண்டுகளை ஒன்றிரண்டாக தட்டிப் போட்டு வதக்க வேண்டும்.
* பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, அதைத்
தொடர்ந்து தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பீர்க்கங்காய் நன்கு வெந்தததும், அதில் வெல்லம், சோம்பு பவுடர் மற்றும் வெந்தயப் பவுடர் சேர்த்து
கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், ஆந்திரா ஸ்டைல் பீர்க்கங்காய் கிரேவி தயார்.
No comments:
Post a Comment