மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ்
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோலுரித்தது)
* எண்ணெய் - 1/4 கப்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
*
பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, ஓரளவாக மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
*
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து வெங்காயத்தைப் போட்டு ஒரு 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். வதக்கும் போது கரண்டியால் உருளைக்கிழங்கை நன்கு மசித்து விட வேண்டும்.
* பின்பு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி,
கரம் மசாலா சேர்த்து நன்கு 5 நிமிடம் பிரட்டி வேக வைக்க வேண்டும்.
* பின் கடலை மாவு சேர்த்து நன்கு கிளறி, 5-8 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் தயார்.
No comments:
Post a Comment