Karasara marrow spice (காரசார வெண்டைக்காய் மசாலா )
தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - கால் கிலோ, வெங்காயம் - -1, தக்காளி --1, சீரகம் -1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 1, கடுகு - -1 தேக்கரண்டி, பெருங்காயம் - கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, நெய் - 1 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி.
செய்முறை: வெண்டைக்காயை குறுக்கே நீளமாக ஃப்ரெஞ்ச் ஃப்ரை போல நறுக்கிக்கொள்ளவும். மேல் முனையை நறுக்கினால் போதும், கீழ்முனையை நறுக்க வேண்டியதில்லை. ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாகியதும், சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். பிறகு ப்பு, பச்சை மிளகாய், தனியா, மஞ்சள்தூ போட்டு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். மற்றொரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டுக் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும், அதில் நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும், மிளகுத்தூள் சேர்க்கவும். வதக்கிய வெங்காயம், தக்காளி மசாலாவை இதில் கொட்டிக் கிளறிப் பரிமாறவும். விரும்பினால் தேங்காய் சேர்க்கலாம்.
--உமா தரணி பரிமாறும் அளவு: 1
மொத்த கலோரி: 488, புரதம்: 7, கொழுப்பு: 34, மாவுச்சத்து: 35.

No comments:
Post a Comment