காராமணி பொரியல்
பொரியல் இல்லாமல் சிலருக்கு சாப்பாடே இறங்காது. உங்களுக்கு தினமும் ஒரே மாதிரியான பொரியல் செய்து சுவைத்து போரடித்திருந்தால், காராமணி பொரியல் செய்து சாப்பிடுங்கள். காராமணி என்பது மிகவும் நீளமாக பீன்ஸ் போன்ற தோற்றத்தைக் கொண்ட காய்கறி. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. ஆனால் இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால், எடையை இழக்க நினைப்போருக்கு ஏற்ற காய்கறி. இந்த காய்கறியை பொரியல் செய்து சாப்பிட்டால் சூப்பராக
இருக்கும்.
உங்களுக்கு காராமணி பொரியல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காராமணி பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காராமணி - 300 கிராம்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
*
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் காராமணியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் பொடியாக நறுக்கிய காராமணி பீன்ஸ் சேர்த்து, உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, குக்கரில் உள்ள காராமணி மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து சில நொடிகள் நன்கு கிளறிவிடுங்கள்.
* பின்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான காராமணி பொரியல் தயார்.
No comments:
Post a Comment