Mughal Veg Biryani (முகலாய் வெஜ் பிரியாணி )
. தேயையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், பாகற்காய், பீன்ஸ் (சேர்த்து) - அரை கப் (நீளவாக்கில் நறுக்கியது). பொடித்த சர்க்கரை - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பழம் - அரை கப் (ஆப்பிள், மாம்பழம்), வெண்ணெய், உலர் திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
அரைக்க: முத்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (15 நிமிடங் கள் ஊறவைக்கவும்), கசகசா - ஒரு டீஸ்பூன் (10 நிமிடங்கள் ஊறவைக்கவும்), மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி – அரை அங்குலத் துண்டு (தோல் சீவவும்).
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும், அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும். வாணலியில் நெய்விட்டு சூடானதும்
அரிசியை சில நிமிடங்கள் வறுக்கவும், குக்கரில் எண்ணெய், வெண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, அரைத்த விழுதைப் போட்டு வதக்கி.. காய்கறி, உப்பு சேர்த்து மேலும் வதக்கி, சர்க்கரை, உலர் திராட்சையைப் போட்டுப் புரட்டவும். பிறகு தேவையான நீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும் ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, நறுக்கிய பழங்களைச் சேர்த்துக் கிளறி பரிமாறயும்,
No comments:
Post a Comment