ஜோத்புரி ஆலு ரெசிபி
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 2 (பெரியது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* வெங்காய விதைகள் - 1 டீஸ்பூன்
*
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில்
உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கடாயில் அதைப் போட்டு, உப்பு மற்றும் சிறிது நீர் ஊற்றி, உருளைக்கிழங்கு நன்கு வேகும் வரை வேக வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு வெந்ததும், நீரை வடிகட்டிவிட்டு, உருளைக்கிழங்கை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
சோம்பு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத் தூள், வெங்காய விதை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு, எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மாங்காய் தூள் தவிர மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
* இறுதியில் மாங்காய் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ஜோத்புரி ஆலு தயார்.
No comments:
Post a Comment