krishna-janmashtami-special-rava-payasam-recipe கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: ரவா பாயாசம் - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday, 30 August 2021

krishna-janmashtami-special-rava-payasam-recipe கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: ரவா பாயாசம்

Krishna Janmashtami Special Rava Payasam Recipe In Tamil

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: ரவா பாயாசம்

தேவையான பொருட்கள்:

* ரவை - 1/2 கப்/100 கிராம்

* பால் - 1 லிட்டர்

* சர்க்கரை - 200 கிராம்

* கண்டென்ஸ்ட் மில்க் - 3 டேபிள் ஸ்பூன்

* ஏலக்காய் - 5

* முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்

* உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்

* நெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மீதமுள்ள நெய்யை வாணலியில் ஊற்றி, அதில் ரவையை சேர்த்து 3 நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.

* பின்பு அதில் பாலை ஊற்றி கட்டிகள் சேராதவாறு நன்கு கிளறி கொதிக்க விட்டு, 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* ரவையானது நன்கு வெந்ததும், அதில் ஏலக்காயை தட்டிப் போட்டு கிளறி விட வேண்டும்.

* பிறகு அதில் சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக அதில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ரவா பாயாசம் தயார்.

No comments:

Post a Comment