ஐயங்கார் வத்த குழம்பு
உங்களுக்கு வத்த குழம்பு ரொம்ப பிடிக்குமா? வத்த குழம்பில் பல வகைகள் உள்ளன. அதில் ஐயங்கார் வத்த குழம்பு வித்தியாசமான செய்முறையைக் கொண்டிருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஐயங்கார் வத்த குழம்பு செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால்
இக்கட்டுரை உங்களுக்கானது.
தேவையான பொருட்கள்:
* மணத்தக்காளி வத்தல் - 1 கையளவு
* புளி - 1 எலுமிச்சை அளவு
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* வெல்லம் - ஒரு நெல்லிக்காய் அளவு
* அரிசி மாவு - 1-2 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1/2 கப்
தாளிப்பதற்கு...
* கடுகு - 3-5 ஸ்பூன்
* கறிவேப்பிலை - ஒரு கையளவு
* பெருங்காயத் தூள் - 2 ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 1 கப்
* வரமிளகாய் - 6
* மிளகு - 4
* வெந்தயம் - 1/4 ஸ்பூன்
* நல்லெண்ணெய் - சிறிது
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி - 2 டீஸ்பூன்
*
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெந்தயம் - 1 ஸ்பூன்
* வரமிளகாய் - 6
* பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
* நல்லெண்ணெய் - சிறிது
செய்முறை:
* முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் புளியைப் போட்டு, 1-2 கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அதை கையால் நன்கு பிசைந்து, கெட்டியான சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், மணத்தக்காளி வத்தலை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் புளிச்சாறு, உப்பு, மஞ்சள் தூள், வெல்லம், அரிசி மாவு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து 12-15 நிமிடம் நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, புளி வாசனை போனதும், அதில் அரைத்த மசாலா மற்றும் வறுத்த வத்தலை சேர்த்து கிளறி மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பானது ஓரளவு கெட்டியாகி மேலே எண்ணெய் மிதக்க ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, குழம்பில் சேர்த்து கிளறினால், சுவையான ஐயங்கார் வத்த குழம்பு தயார்.
குறிப்பு:
* ஐயங்கார் வத்தக்குழம்பில் அரிசி மாவுக்கு பதிலாக, விரலி மஞ்சளை
சிறிது பொடித்து சேர்த்துக் கொள்ளலாம்.
* இந்த வத்த குழம்பிற்கு மணத்தக்காளி வத்தல் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேண்டுமானால், இதில் சுண்டைக்காய் வத்தலை சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment