Amirthapodi Biryani (அமிர்தப்பொடி பிரியாணி)
அமிர்தப்பொடி பிரியாணி
தேவையாைைல: பாசுமதி அரிசி - ஒரு கட், மிளகு, சீரகம், வெந்தயம், எள், ஓமம், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சக்குப் பொடி - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்டன், நாரத்தை இலைகள் - 10, சோம்பு - அரை டீஸ்பூன், ஜமிச்சைப் பழம் - ஒரு மூடி (சாறு எடுக்கவும்), மராட்டி மொக்கு - ஒன்று, பட்டைப் பொடி - அரை டீஸ்பூன், சீரகம் (அலங்கரிக்க) - சிறிதளவு, நறுக்கிய சின்ன வெங்காயம் கால் கட், நெய், உப்பு - சிறிதளவு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பாசுமதி அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து, தேவையான நீர், உப்பு சேர்த்து பொலபொலவென்று சாதமாக வடித்துக்கொள்ளவும், வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் மிளகு, சீரகம், யெந்தயம், என், ஓமம், சோம்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றாக பொடித்துக் கொள்ளவும். வெறும் வானலியில் கறிவேப்பிலை, நார்த்தை இலையை ஒவ்வொன்றாக வறுத்து,
தனித்தனியே மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்னொய் விட்டு சூடானதும் மராட்டி மொக்கு, பட்டைப் பொடி சேர்த்து, வடித்த சாதம், கறி வேப்பிலை - நாரத்தை பொடி, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, சிறிது உப்பு, மற்ற பொடிகள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து இறக்கவும். சீரகத்தையும், சின்ன பெங்காயத்தையும் நெய்யில் வதக்கி மேவே தூவிப் பரிமாறவும்,
No comments:
Post a Comment