karupatti-pudding-recipe கருப்பட்டி புட்டிங் - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday 26 August 2021

karupatti-pudding-recipe கருப்பட்டி புட்டிங்

Karupatti Pudding Recipe In Tamil

கருப்பட்டி புட்டிங்


உங்களுக்கு கருப்பட்டி புட்டிங் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பட்டி புட்டிங் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கருப்பட்டி - 2 கப்

* தண்ணீர் - 1 1/2 கப்

 தேங்காய் பால் - 2 கப்

* அகர் அகர்/கடல் பாசி - 10 கிராம்

* சுக்கு பொடி - 1 டீஸ்பூன்


செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் கடல் பாசியை எடுத்து, அதில் 1/2 கப் நீரை ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கருப்பட்டி முற்றிலும் உருகும் வரை குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு ஊற வைத்துள்ள கடல் பாசியை அடுப்பில் உள்ள கருப்பட்டியுடன் சேர்த்து கிளறி, குறைவான தீயில் கடல்பாசியை முற்றிலும் உருக வைத்து இறக்க வேண்டும்.

* பிறகு அதை வடிகட்டி குளிர வைக்க வேண்டும்.

* அதன் பின் அதில் தேங்காய் பால் மற்றும் சுக்கு பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.


* இப்போது ஒரு அகலமான மற்றும் சற்று தட்டையான பாத்திரத்தில் இதை ஊற்றி, ஃப்ரிட்ஜில் செட் ஆகும் வரை வைக்க வேண்டும்.

* இறுதியாக ஒரு கத்தியால் துண்டுகளாக வெட்டினால், கருப்பட்டி புட்டிங் தயார்.

குறிப்பு:

* கருப்பட்டி இல்லாவிட்டால், வெல்லத்தைக் கொண்டும் தயாரிக்கலாம்.

* உங்களுக்கு சுக்கு பொடி ஃப்ளேவர் பிடிக்காவிட்டால், அதற்கு பதிலாக ஏலக்காய் பவுடர் அல்லது வென்னிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

* வேண்டுமானால் தேங்காய் பாலுக்கு பதிலாக, வழக்கமான பாலை சேர்த்துக் கொள்ளலாம்.

* கடல் பாசியுடன் பால் சேர்க்கும் போது அதை கொதிக்க வைத்து சேர்க்கக்கூடாது. இல்லாவிட்டால் அது திரிந்துவிடும். எனவே குளிர்ந்த பாலை தான் சேர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment