Ima Dachi (இமா டாச்சி )
தேவையான பொருட்கள்: நீள வகை பச்சை மிளகாய் - 200 கிராம். ஃபட்டா சீஸ் - 50 கிராம், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1 (தேவைப்பட்டால் மட்டும்). பூண்டு - 5 பல், வெண்ணைய் - 1 தேக்கரண்டி, மோஸிரேல்லா சீஸ் - 200 கிராம், தண்ணீர் - 2 கப்.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு லேசாக வதக்கி விட்டு, 2 கப் தண்ணீரை ஊற்றி மிதமான சூட்டில் கொதி வரும் வரை மூடி வைக்கவும். பின்னர் ஃபட்டா சீஸ் + வெண்ணெய் போட்டு நன்றாக கலக்கி 5 நிமிடம் மூடி வைக்கவும். மோஸிரேல்லா சீஸ் கலந்து நல்லா கலக்கி விடவும், நன்றாக வெந்து வர்ற நேரம் வரைக்கும் மிதமான சூட்டில் வைக்கவும். சுவை பார்த்து விட்டு தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்கவும். தக்காளியும் தேவைப்பட்டால் மட்டும் சேர்க்கலாம். இதனுடன் காளான் கலந்தும் செய்யலாம், அது மஷ்ரூம் இமா டாச்சி. மிளகாய்க்கு பதிலாக உருளைக்கிழங்கு போட்டால் அது கேவா டாச்சி.
சேதுபதி சுப்ரமணியம்
பரிமாறும் அளவு: 1
மொத்த கலோரி: 983, புரதம்: 56, கொழுப்பு: 67, மாவுச்சத்து 39.

No comments:
Post a Comment