Beetroot curry and egg yolks (மணத்தக்காளிக்காய் காரக்குழம்பும் முட்டை பணியாரமும்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday 7 August 2021

Beetroot curry and egg yolks (மணத்தக்காளிக்காய் காரக்குழம்பும் முட்டை பணியாரமும்)

Beetroot curry and egg yolks  (மணத்தக்காளிக்காய் காரக்குழம்பும் முட்டை பணியாரமும்)



தேவையான பொருட்கள்: மணத்தக்காளி காய் - 1 கப், சின்ன வெங்காயம் - 15, பச்சை மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - 1 தேக்கரண்டி, வெந்தயம் - அரை தேக்கரண்டி, தக்காளி பேஸ்ட் -- 100 கிராம், மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, மல்லித்தூள் - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி, புளித்தண்ணீர் - 60 மில்லி, மல்லி இலை - சிறிதளவு, உப்பு தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி.

செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, வெந்தயம் பொரிய விடவும். இத்துடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும். இவைகள் பொரிந்ததும் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இத்துடன் மணத்தக்காளிக் காய் சேர்த்து நன்கு வதக்கவும் (காய்கள் வெள்ளை நிறம் வரும்வரை வதக்கவும். அப்போதுதான் கசப்பு இருக்காது). இத்துடன் மேலே கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கிளறவும். இப்பொழுது தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கி, புளித்தண்ணீர், அரை கப் தண்ணீர் சேர்த்து உப்பு தூவி வேகவிடவும். நன்கு கொதித்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும். இதனை காலிஃப்ளவர் ரைஸ், முட்டைபணியாரம் போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு : மாவுச்சத்து அதிகமாக உள்ளதால் இந்தக் குழம்பை மிக குறைந்த அளவில் உபயோகிக்க வேண்டும்.

No comments:

Post a Comment