ஹோலி ஸ்பெஷல்: பாங் தண்டை
தேவையான பொருட்கள்:
* முழு கொழுப்பு நிறைந்த பால் - 1 லிட்டர்
* குங்குமப்பூ - சிறிது
* சர்க்கரை - 3/4 கப்
பாங் தண்டை மசாலாவிற்கு...
* கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பாதாம் - 1/4 கப்
* மிளகு - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 3 (பொடித்து கொள்ளவும்)
* பாங் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாங் தண்டை செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பாதாமின் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் கசகசா, சோம்பு, தோலுரித்த பாதாம், மிளகு, ஏலக்காய் விதைகள் மற்றும் பாங் பேஸ்ட் சேர்த்து நன்க
ு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பால் நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பாங் தண்டை மசாலா, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அல்லது ஹேண்ட் பிளெண்டர் கொண்டு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அடுப்பை அணைத்துவிட்டு பாங்கை குளிர வைக்கவும். பாங் தண்டை ஓரளவு குளிர்ந்ததும், அதை ஃப்ரிட்ஜில் குறைந்தது 5-6 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். வேண்டுமானால், இதில் ஐஸ் கட்டிகளை சேர்த்தும் பரிமாறலாம். இப்போது சுவையான பாங் தண்டை தயார்.
No comments:
Post a Comment