ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் மசாலா பிரட்டல்
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்காய் - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்ச
ி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* வறுத்த வேர்க்கடலை- 1/2 கப்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1 இன்ச்
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் தக்காளியைத் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு
அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மசாலாவை வேக வைக்க வேண்டும்.
* பத்து நிமிடம் கழித்து, அதில் முருங்கைக்காயை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, மீண்டும் பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* முருங்கைக்காய் நன்கு வெந்ததும், அதில் இருந்து எண்ணெய் வெளிவர ஆரம்பிக்கும். அப்போது அடுப்ப
ை அணைத்து இறக்கினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் மசாலா பிரட்டல் தயார்.
No comments:
Post a Comment