பக்ரீத் ஸ்பெஷல்: பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 250 கிராம்
*
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 1
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெய் ஊற்றி ஆடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்த
ு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பின் மட்டன் துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் தயிர் சேர்த்து பிரட்டி, ஒரு கப் நீரை ஊற்றி, மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும். ஒருவேளை மட்டன் வேகாமல் இருந்தால், மீண்டும் மூடி 2 விசில் சிட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து மட்டனை கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேல் கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி தயார்.
No comments:
Post a Comment