brinjal masala (எண்ணெய் கத்திரிக்காய் பொரியல்) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday, 16 August 2021

brinjal masala (எண்ணெய் கத்திரிக்காய் பொரியல்)


எண்ணெய் கத்திரிக்காய் பொரியல்


தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

* சீரகம் - 1/2 டீஸ்பூன்

* சோம்பு - 1/2 டீஸ்பூன்

* வரமிளகாய் - 1

* கறிவேப்பிலை - சிறிது

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - 5 பல்

* கத்திரிக்காய் - 4 (பெரியது மற்றும் நீளமாக துண்டுகளாக்கப்பட்டது)

* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், சோம்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, கத்திரிக்காயை நன்கு வேக வைக்க வேண்டும்.

* கத்திரிக்காய் நன்கு வெந்து சுருங்கியதும், அதில் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

* மிளகாய் தூளின் பச்சை வாசனை போனதும், அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் தயார்.

No comments:

Post a Comment