restaurant-style-palak-paneer ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday, 22 August 2021

restaurant-style-palak-paneer ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர்

Restaurant Style Palak Paneer Recipe In Tamil

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர்


தேவையான பொருட்கள்:

* பாலக் - 4 கப்

* வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* பட்டை - 1 துண்டு

* ஏலக்காய் - 4

  பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

* பெரிய தக்காளி - 2 (அரைத்துக் கொள்ளவும்)

* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* சீரகப் பொடி - 2 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

* பன்னீர் - 200 கிராம்

* பிரஷ் க்ரீம் - 1/2 கப்

* உலர்ந்த வெந்தயக் கீரை - 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். பின் அதில் பாலக் கீரையைப் போட்டு 2 நிமிடங்கள் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, கீரையை பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருகியதும், சீரகம், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி, 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.


* அதன் பின் மிளகாய் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

* அடுத்து, அரைத்து வைத்துள்ள பாலக் கீரையை சேர்த்து நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி 1-2 நிமிடம் பன்னீரை வேக வைத்து வெந்ததும், காய்ந்த வெந்தய கீரை மற்றும் க்ரீம் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் தயார்.

குறிப்பு:

* பாலக் கீரையை அதிகமாக வேக வைத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால், அதன் பச்சை நிறம் போய்விடும்.

* கடைகளில் விற்கப்படும் பன்னீரைப் பயன்படுத்துபவராக இருந்தால், அதை சிறு துண்டுகளாக வெட்டி, வெதுவெதுப்பான நீரில் போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து, பின் பயன்படுத்துங்கள்.

* ஒருவேளை உங்களிடம் க்ரீம் இல்லையென்றால், பாலில் சிறிது சோளமாவு சேர்த்து கலந்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

* பாலக் கீரையை சேர்த்த பின், மூடி வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அதன் நிறம் மாறிவிடும்.

No comments:

Post a Comment