Punch Boran Mixed Veggie Stir Fry (பாஞ்ச் போரன் மிக்ஸட் வெஜ்ஜி ஸ்டிர் ஃப்ரை ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Thursday 5 August 2021

Punch Boran Mixed Veggie Stir Fry (பாஞ்ச் போரன் மிக்ஸட் வெஜ்ஜி ஸ்டிர் ஃப்ரை )

Punch Boran Mixed Veggie Stir Fry (பாஞ்ச் போரன் மிக்ஸட் வெஜ்ஜி ஸ்டிர் ஃப்ரை  )



தேவையான பொருட்கள்: காய்கறிகள் (காலிஃப்ளவர் - 100 கிராம், கோவைக்காய் - 100 கிராம், ப்ரோக்கோலி - 100 கிராம், கேரட் - 50, 100 கிராம், கத்திரிக்காய் - 50, 100 கிராம், சிவப்பு குடமிளகாய் - 100 கிராம்) எல்லாம் சேர்த்து - அரை கிலோ, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி, பஞ்ச பூரன் (கருஞ்சீரகம், சோம்பு, கடுகு, சீரகம், வெந்தயம்) - 1 தேக்கரண்டி, பெருங்காயம் - கால் தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சைமிளகாய் - 1 (பொடியாக அரிந்தது).

செய்முறை: காய்கறிகளை அரிந்து கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து கருகாமல் தாளித்து காய்களை சேர்த்து நன்கு வதக்கி, தீயின் தணலை குறைவாக

வைத்து சிம்மில் அனைத்து காய்களையும் வேகவிட்டு கடைசியாக சிறிது நெய் விட்டு கிளறி இறக்கவும்.

குறிப்பு: குஜராத், பெங்காலிகள் சமையலில் இந்த 5 வகை அஞ்சறை பெட்டி பொருட்கள் இல்லாமல் சமையல் கிடையாது. இதை (கருஞ்சீரகம், சோம்பு, கடுகு, சீரகம், வெந்தயம்) சம அளவில் கலந்து வைத்து கொண்டால் காய் வகைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

- ஜலீலா கமால்

பரிமாறும் அளவு: 1

மொத்த கலோரி: 418, புரதம்: 10, கொழுப்பு: 27, மாவுச்சத்து: 29.

No comments:

Post a Comment