Coconut milk biryani (தேங்காய்ப்பால் பிரியாணி )
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப்,
தேங்காய்ப்பால் - 2 கப், காலிஃப்ளவர் (உதிர்ந்தப் பூ) – கால் கப், பச்சைப் பட்டாணி (உரித்தது) - 2 டேபிள்ஸ்பூன், பிரியாணி இலை - ஒன்று, கிராம்பு - 3; நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், நீளமாக நறுக்கிய பீள்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 2 (நறுக்கவும்), பச்சை மிளகாய் - 4 (கிறவும்), பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை நீரில் அலசி 15 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு நீரை வடிக்கவும். வாணலியில்
சிறிதளவு நெய்விட்டுச் சூடாக்கி, அரிசியை ஈரம் போகும் வரை சில நிமிடங்கள் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் - நெய்விட்டு, சூடானதும் பிரியாணி இலை, கிராம்பு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, பச்சைப் பட்டாணி, நறுக்கிய காலிஃப்ளவர், பீன்ஸ், உப்பு சேர்த்து வதக்கவும். தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து, வறுத்த அரிசி சேர்த்து கலக்கி, தீயைக் குறைத்து, வெயிட் போடவும். 10-15 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment