தேங்காய் அல்வா
தேவையான பொருட்கள்:
* நற்பதமான துருவிய தேங்காய் - 1 கப்
* கொதிக்க வைத்து குளிர வைத்த பால் - 1 1/4 கப்
* சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாவ
வதக்கவும்.
* அதன் பிறகு கொதிக்க வைத்து குளிர வைத்த பாலை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்கவும்.
* பாலானது சுண்டி நீரின்றி போகும் நிலையில் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறி விடவும். கலவையானது கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருங்கள்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் கிளறும் போது, அல்வா போன்று எதிலும் ஒட்டாமல் வரும். அப்போது முந்திரி மற்றும் எஞ்சிய நெய்யையும் சேர்த்து கிளறி இறக்கினால், தேங்காய் அல்வா
தயார்.
குறிப்பு:
* மற்ற அல்வாக்களைப் போல் இந்த அல்வாவிற்கு அதிக நெய் தேவைப்படாது. மேலே குறிப்பிட்டுள்ளதை விட குறைவாக 2 டேபிள் ஸ்பூன் மட்டும் பயன்படுத்தினாலே போதும்.
* தேங்காயை துருவ முடியாவிட்டாலும் பரவாயில்லை. தேங்காயை துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்தும் பயன்படுத்தலாம்.
* நற்பதமான தேங்காயை மட்டும் பயன்படுத்துங்கள்.
* ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டால், சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
* உங்களுக்கு தேவையான இனிப்பு சுவைக்கு ஏற்ப சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment