bombay-chutney-recipe பாம்பே சட்னி - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Tuesday, 31 August 2021

bombay-chutney-recipe பாம்பே சட்னி

Bombay Chutney Recipe In Tamil

பாம்பே சட்னி

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (நறுக்கியது)

* மஞ்சள் தூள் - 3/4 டீஸ்பூன்

* தண்ணீர் - 1 கப்

* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1 டீஸ்பூன்

* கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

* பச்சை மிளகாய் - 1

* கறிவேப்பிலை - சிறிது

* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.


* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, உப்பு சிறிது தூவி நன்கு மென்மையாக வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கவும்.

* பின்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி, பின் கடவை மாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்.

* பிறகு 1 கப் நீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குறைவான தீயில் மூடி வைத்து கொதிக்க வைக்கவும்.

* கிரேவி சற்று கெட்டியாகி பச்சை வாசனை போனதும், மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பாம்பே சட்னி தயார்!

குறிப்பு:

உங்களுக்கு சட்னி சற்று புளிப்பாக வேண்டுமானால், அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment