ராகி மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கொக்கோ பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன்
* பால் - 1 1/2 கப்
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* வென்னிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 3/4 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி 3-5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர
வைக்க வேண்டும்.
* பின் மற்றொரு பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் கொக்கோ பவுடரைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கலவை நன்கு கெட்டியாகும் வரை வேக வைக்கவும். ராகி நன்கு வெந்த பின் அதை இறக்கி 15-30 நிமிடம் நன்கு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்ஸர் ஜாரில் குளிர்ந்த பால், சர்க்கரை மற்றும் குளிர வைத்துள்ள ராகி கலவை, வென்னிலா எசன்ஸ் சேர்த்து,
நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான ராகி மில்க் ஷேக் தயார்.
குறிப்பு:
* உங்களுக்கு கொக்கோ பவுடர் பிடிக்காவிட்டால், வென்னிலா எசன்ஸ் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால், கொக்கோ பவுடர் சேர்த்துக் கொள்வான் மூலம், ராகியின் ப்ளேவரை மறைத்துவிடும். இதனால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.
* கொழுப்பு நிறைந்த பாலைப் பயன்படுத்தினால் நல்ல சுவையுடன் இருக்கும்.
* சர்க்கரையை உங்களுக்கு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment