Cauliflower Cassie (காலிஃப்ளவர் கஸ்ஸி )
தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - 1 கிலோ, தேங்காய் பால் - 2 கப், தேங்காய் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி, வெங்காயம் - 2, பூண்டு - 10,தக்காளி - 1, கடுகு - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு.
மசாலா வறுத்து அரைக்க: சீரகம் - கால் தேக்கரண்டி, சோம்பு - கால் தேக்கரண்டி, மல்லி விதை - கால் தேக்கரண்டி, கசகசா - அரை தேக்கரண்டி, மிளகு - கால் தேக்கரண்டி, வரமிளகாய் - 6
செய்முறை: ஒரு வாணலியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து சுத்தம் செய்த காயை நன்றாக வதக்கி பின் நீர் தேவையான அளவு சேர்த்து நன்றாக வேகவிடவும், சீரகம், சோம்பு, மல்லி விதை, கசகசா, மிளகு, வரமிளகாய் இவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி இதையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி அரைத்து கொள்ளவும். தேவையான பூண்டு அரைக்கவும். ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அரைத்த இந்த விழுதுகளை நன்றாக வதக்கி அத்துடன் மசாலா பொடியையும் சேர்த்து வேகவைத்த காயுடன் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு பின் அதில் உப்பு சேர்த்து அடுப்பை
அணைத்து விடவும். இறக்கி வைத்து அதில் அரைத்து எடுத்த தேங்காய்ப்பால், மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிடவும். இதை நீர் தோசை அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவார்கள். நமக்கு இது மட்டுமே உணவு.
- டாலி பாலா
பரிமாறும் அளவு: 4
மொத்த கலோரி: 1920, புரதம்: 46, கொழுப்பு: 151, மாவுச்சத்து: 110.

No comments:
Post a Comment