Cantaloupe spice curry (பாகற்காய் மசாலா கறி )
தேவையான பொருட்கள்: பெரிய அளவு பாகற்காய் -- 200 கிராம், வெங்காயம் - 1, தக்காளி - 2, மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி, வத்தக் குழம்பு பொடி - 1 தேக்கரண்டி, வெர்ஜின் தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சமைப்பதற்கு 3 மணி நேரம் முன் பாகற்காயை நன்றாக
அலம்பி, மிக சிறு துண்டுகளாக நறுக்கவும். விதைகளை மட்டும் நீக்கி, காயை முழுவதுமாக உபயோகப்படுத்த வேண்டும். இதனுடன் சிறிது தயிர் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து பிசிறி வைக்கவும். தேவையானால் இதை முந்தைய நாள் செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்து மறுநாள் சமைக்கலாம்.இப்போது பாகற்காயில் கசப்பு குறைந்திருக்கும். நன்றாக ஊறிய பாகற்காயை தண்ணீர் விட்டு அலம்பவும். வாணலியில் வெர்ஜின் தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு,
பெருங்காயம் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்கிக்கொள்ளவும். அடுத்து நறுக்கிய தக்காளி, மஞ்சள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இதனுடன் வத்தக்குழம்புப்பொடி (அல்லது சாம்பார் / ரசம் பொடி) சேர்க்கவும். அடுத்து பாகற்காய் துண்டு களையும் சேர்த்து 10 நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும். உப்பு சேர்த்து கலக்கவும்.
- நாகராஜன் சுதா
பரிமாறும் அளவு: 1
மொத்த கலோரி: 394, புரதம்: 5, கொழுப்பு: 30, மாவுச்சத்து: 23.
No comments:
Post a Comment