Pumpkin Juice (பூசணிக்காய் மோர்க்கூட்டு ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Sunday 8 August 2021

Pumpkin Juice (பூசணிக்காய் மோர்க்கூட்டு )



Pumpkin Juice (பூசணிக்காய் மோர்க்கூட்டு )


தேவையான பொருட்கள்: வெள்ளை பூசணிக்காய் - அரை கிலோ, கடுகு

- 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, பெருங்காயம் - கால் தேக்கரண்டி, தயிர் - 1 கப்.

அரைக்க: தேங்காய் துருவல் - 1 கப், சீரகம் - 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 3, தேங்காய் எண்ணெய்--2 மேஜைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூசணிக்காயை தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பிலோ, மைக்ரோவேவிலோ சமபங்கு தண்ணீர் விட்டு, கொஞ்சம் உப்பு போட்டு 8--10 நிமிடங்கள் வேக வைக்கவும். பூசணி வேகும் நேரத்தில், மிக்ஸியில் தேங்காய், சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் சூடாக்கி கறிவேப்பிலை, சீரகம், கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். அதில் இந்த அரைத்த தேங்காயை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.

இந்த நேரத்துக்குள் பூசணி வெந்திருக்கும். முக்கால் வெந்தால் போதுமானது. அதையெடுத்து அடுப்பில் உள்ள தேங்காயில் போட்டு சிறு தீயில் 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பூசணி 100% வெந்து தேங்காய், பச்சைமிளமாய் கிரேவி டேஸ்ட்டுடன் சேர்த்து சரியாக வெந்திருந்தால் அடுப்பை அணைத்து விடவும். இத்தோடு நிறுத்தி விட்டு பூசணிக்காய் கூட்டாய் சாப்பிடலாம். இல்லை தயிரை ஒரு கப் சேர்த்து, கலக்கி ‘பூசணிக்காய் மோர்க் கூட்டாய்' சாப்பிடலாம்.

குறிப்பு: தயிரை அடுப்பை அணைத்த பிறகே விடவேண்டும். இல்லையெனில் திரிதிரியாய் வந்துவிடும்.

- ரசனை ஸ்ரீராம்

பரிமாறும் அளவு: 2

No comments:

Post a Comment