Vegetable avial (காய்கறி அவியல் )
தேவையான பொருட்கள்: கத்தரிக்காய், கேரட், முருங்கை, வெள்ளை பூசணிக்காய் (பேலியோ காய்கள் எவையேனும் உபயோகிக்கலாம்) அரை கிலோ, தேங்காய் எண்ணெய் - 2 மேஜைக் கரண்டி, உப்பு - தேவையான அளவு.
மசாலா அரைக்க: துருவிய தேங்காய்- -- 1 கப், சீரகம் - 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - 1 1, தயிர் - ஒன்றரை கப்.
தாளிக்க: தேங்காய் எண்ணெய் -- 1 மேஜைக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: கத்தரிக்காய், கேரட், முருங்கை மற்றும் பேலியோ காய்கள் அனைத்தையும் நீள நீளமாய் நறுக்கவும். பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்களை போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின்னர் உப்பு மற்றும் நீர் சேர்த்து காய்களை வேக விடவும். (அரை கிலோவிற்கு 50 - 80 மி.லி., நீர் போதுமானது). ஒரு கப் துருவிய தேங்காய், சீரகம், பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், தயிர்.. இது அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து, காயுடன் சேர்த்து 2 நிமிடம் கிளறவும். கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.

No comments:
Post a Comment