பட்டர் பீன்ஸ் குருமா
தேவையான பொருட்கள்:
* பட்டர் பீன்ஸ் - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1/2 இன்ச்
* பூண்டு - 5 (பொடியாக நறுக்கியது)
அரைப்பதற்கு...
* தேங்காய் - 3/4 கப்
* முந்திரி - 3
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பட்டர் பீன்ஸின் தோலை நீக்கி, தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து
கொள்ளுங்கள்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்கவும்.
* பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள
தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து, 2 கப் நீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
* பின்பு எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், பட்டர் பீன்ஸை சேர்த்து, குக்கரை மூடி குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும்.
* இறுதியில் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பட்டர் பீன்ஸ் குருமா ரெடி!
No comments:
Post a Comment