கத்திரிக்காய் பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 2
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
பஜ்ஜி மாவிற்கு...
* கடலை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் ஒர
ு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு கத்திரிக்காயை நீள வாக்கிலோ அல்லது வட்ட வடிவிலோ வெட்டிக் கொள்ளுங்கள்.
* அதன் பின் நறுக்கிய கத்திரிக்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான கத்திரிக்காய் பஜ்ஜி தயார்.
No comments:
Post a Comment