ஆலு பிந்தி ரெசிபி
தேவையான பொருட்கள்:
* வேக வைத்த உருளைக்கிழங்கு (ஆலு) - 1
* வெண்டைக்காய் (பிந்தி) - 10
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 2 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெண்டைக்காயை நீரில் நன்கு கழுவி, ஒரு துணியால் துடைத்துக் கொள்ள வேண்டும். பின் அதன்
இரு முனைகளையும் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு, குறைவான தீயில் சுருங்கும் வரை வதக்கி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் உருளைக்கிழங்கை போட்டு நீர் ஊற்றி 3-4 விசில் விட்டு இறக்கி, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* பின் வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கை வெண்டைக்காய் வதக்கிய வாணலிலேயே போட்டு சிறிது நேரம் வதக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
* பின்பு அதே வாணலியில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.
* பிறகு வெங்காயத்தைப்
போட்டு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகவும் வரை வதக்கவும்.
* அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக நன்கு 2 நிமிடம் வதக்கி, பின் வெண்டைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து பிரட்டி, 3-5 நிமிடம் குறைவான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.
* மசாலா வெண்டைக்காய் மற்றும் உருளைக்கிழங்குடன் நன்கு ஒன்று சேர்ந்தும் இறுதியில் மாங்காய் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான ஆலு பிந்தி தயார்..!
குறிப்பு:
உங்களிடம் மாங்காய் தூள் இல்லாவிட்டால், எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment