Kashmir Biryani (காஷ்மீர் பிரியாணி )
தேவையானவை: பாசுமதி அரிசி ஒரு கப், சிறிய சதுரமாக நறுக்கிய பழத் துண்டுகள் (அன்னாசி, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவை டின்னில் கிடைக்கும்) அரை கப், வெங்காயம் - 2 (நறுக்கவும்), உவர் திராட்சை, பேரீச்சை (விதை நீக்கி, நறுக்கியது) உலர் பூசணி விதை, டூட்டி ஃப்ரூப்பு, செர்ரிப்பழம், திராட்சைப்பழம் (விதையற்றது - தலா ஒரு டேபிள்ஸ்யூன், ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ, ஏலக்காய்த்நூள் - தலா ஒரு டீஸ்பூன், கிராம்பு - 2, துருவிய பனீர் - 2 டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ச்சி ஆறவைந்த பால் - சிறிதளவு, பொடியாக நறுக்கிய கேரட் - 2 டேபிள்ஸ்புள், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து, அளவான உப்பு சேர்த்து வேசுவிட்டு எடுத்துக்கொள்ளயும், வெண்ணெயை சூடாக்கி வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும்.
வாணலியில் நெய்விட்டு சூடானதும் சீரகம் தாளித்து, கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி,
உலர் நிராட்சை, பேரீச்சை, உலர் பூசணி விதை, டூட்டி ஃப்ரூட்டி, செர்ரிப்பழம், திராட்சைப்பழம், சர்க்கரை சேர்த்துக் கிளறி... சாதம், ஏலக்காய்த்தூள், கிராம்பு சேர்த்து மேலும் கிளறவும். இதனுடன் பனீர் துருவல், பழத்துண்டுகள் சேர்த்துக் கிறைவும், பிறகு ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து குங்குமப்பூலைச் சிறிது பாவில் கரைத்து ஊற்றி, வதக்கிய வெங்காயத்தை மேலே சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்,
No comments:
Post a Comment