முட்டை மலாய் மசாலா
தேவையான பொருட்கள்:
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 4
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
* பால் - 1 1/2 கப்
* பிரஷ் க்ரீம் - 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 4
* பச்சை மிளகாய் - 2
மசாலா பொடிகள்...
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முட்டையை நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
* பின் மிக்சர் ஜாரில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் மற்றம் எண்ணெய் ஊற்ற
ி சூடேற்ற வேண்டும்.
* பின்பு அதில் வெங்காய விழுது சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி, பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மசாலா பொடிகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பாலை ஊற்றி, வேண்டுமானால் சிறிது நீரை சேர்த்து கிளறி, மூடி வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் மூடியைத் திறந்து, அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக வெட்டி வைத்துள்ள முட்டைகளை சேர்த்து, மேலே மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, சில நிமிடங்கள் வேக வைத்து இறக்கி, மூடியைத் திறந்து கிளறினால், சுவையான முட்டை மலாய் மசாலா தயார்.
No comments:
Post a Comment