ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமா
தேவையான பொருட்கள்:
* சன்னா/கொண்டைக்கடலை - 1 கப்
* வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 1
* ஏலக்காய் - 1
* அன்னாசிப்பூ - 1
* கறிவேப்பிலை - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/2 கப்
* இஞ்சி - 1/2 இன்ச்
* ஏலக்காய் - 1
* பட்டை - 1/4 இன்ச்
* கிராம்பு - 1
* பூண்டு - 1 பல்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 10
* பச்சை மிளகாய் - 1
* முந்திரி - 10
செய்முறை:
* முதலில் சன்னாவை சுடுநீரில் 4-5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை குக்கரில் போட்டு போதுமான அளவு நீரை ஊற்றி 5 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்ஸர் ஜாரில் அரைப்பதற்கு
கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, சிறிது நீர் ஊற்றி, அத்துடன் சிறிது வேக வைத்துள்ள சன்னாவை போட்டு, பேஸ்ட் போல் மென்மையாக நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
* பின் அதில் வெங்காயம், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்கவும்.
* பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து ஒருமுறை வதக்கி, அரைத்து வைத்துள்ள
தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து கிளறி, 1 கப் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குருமாவின் மேலே எண்ணெய் மிதக்க ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, குருமாவின் மேலே கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமா ரெடி!
No comments:
Post a Comment