பார்பிக்யூ நேஷன் ஸ்டைல் கிரிஸ்பி கார்ன்
தேவையான பொருட்கள்:
* கார்ன் - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 1 டேபிள் பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மசாலா பொடிகள்...
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/8 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1/3 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் மசாலா பொடிகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் கார்ன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட வேண்டும்.
* பின் அதை ஒரு பௌலில்
போட்டு, அத்துடன் அரிசி மாவு, சோள மாவு சேர்த்து கரண்டியால் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் உள்ள அதிகப்படியான மாவை குலுக்கி வெளியேற்ற வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் நன்கு சூடானதும், அதில் சிறிது கார்னை சேர்த்து மூடி வைத்து சில நொடிகள் வேக வைத்து, பின் மூடியைத் திறந்து ஒருமுறை நன்கு
கிளறி விட்டு எடுக்க வேண்டும். இதேப் போல் மீதமுள்ள கார்னையும் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும்.
* இறுதியாக வறுத்த கார்னை ஒரு பௌலில் போட்டு, அதில் கலந்து வைத்துள்ள மசாலா பொடி, வெங்காயம், கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, ஒருமுறை கிளறிவிட்டால், சுவையான பார்பிக்யூ நேஷன் ஸ்டைல் கிரிஸ்பி கார்ன் தயார்.
No comments:
Post a Comment