முகலாய் பன்னீர் கிரேவி ரெசிபி
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
*
பச்சை மிளகாய் - 3-4
* முந்திரி - 10-12
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சாஹி சீரகம் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* பன்னீர் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* தயிர் - 1/2 கப்
* உலர்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்
* க்ரீம் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் முந்திரியைப் போட்டு, ஒரு கப் நீரை ஊற்றி, வெங்காயம் நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் நெய் ஊற்றி சூடானதும், சாஹி சீரகம் சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் உப்பு, சர்க்கரை மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு, குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் தயிரை ஊற்றி கிளறி, பன்னீர் துண்டுகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
* இறுதியாக அதில் உலர்ந்த வெந்தயக்
கீரையை கையால் நசுக்கிப் போட்டு, க்ரீம் சேர்த்து கிளறி இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், முகலாய் பன்னீர் கிரேவி தயார்.
No comments:
Post a Comment