garlic chilly chutney (பூண்டு மிளகாய் சட்னி) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday 16 August 2021

garlic chilly chutney (பூண்டு மிளகாய் சட்னி)



பூண்டு மிளகாய் சட்னி

தேவையான பொருட்கள்:

* சின்ன வெங்காயம் - 5

* பூண்டு - 10 பல்

* வரமிளகாய் - 5

* காஷ்மீரி மிளகாய் - 5

* புளி - 1 டேபிள் ஸ்பூன்

 நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1/2 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின் அதில் வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வேண்டும்.

* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைக்க வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.


* பின் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, 2-3 நிமிடம் அல்லது அடர் சிவப்பு நிறத்தில் மாறும் வரை வதக்கி இறக்கினால், சுவையான பூண்டு மிளகாய் சட்னி தயார்.

குறிப்பு:

* வதக்கி அரைத்து தாளித்த பின் சட்னியை நீண்ட நேரம் வேக வைக்கக்கூடாது.

* இந்த சட்னிக்கு நல்லெண்ணெயைப் பயன்படுத்தினால், அது இந்த சட்னிக்கு நல்ல ப்ளேவரைக் கொடுக்கும். எக்காரணம் கொண்டும் நல்லெண்ணெயின் அளவைக் குறைத்துவிட வேண்டாம். இல்லாவிட்டால், சட்னி பச்சை வாசனையுடன் இருக்கும்.

* நல்லெண்ணெய் நல்ல சுவையைக் கொடுப்பதோடு, காரத்தை கட்டுப்பாட்டில் வைக்கும். கூடுதலாக தாளிக்கும் போது கடுகுடன், சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்துக் கொள்ளலாம்.


* சட்னியின் நிறம் அதற்கு பயன்படுத்தும் வரமிளகாய் வகையைப் பொறுத்தது. இந்த சட்னியில் பாதி வரமிளகாயும், பாதி காஷ்மீரி வரமிளகாயும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் காஷ்மீரி வரமிளகாய் நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment