paneer-cashew-gravy ருசியான... பன்னீர் முந்திரி கிரேவி - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Tuesday 31 August 2021

paneer-cashew-gravy ருசியான... பன்னீர் முந்திரி கிரேவி

Paneer Bhurji Gravy Recipe In Tamil

ருசியான... பன்னீர் முந்திரி கிரேவி

தேவையான பொருட்கள்:

* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கவும்)

* கரம் மசாலா - 1 டீஸ்பூன்

* காய்ந்த வெந்தய கீரை இலைகள் - 1 டீஸ்பூன்

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* கருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* சர்க்கரை - 1 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப

அரைப்பதற்கு...

* தக்காளி - 4 (நறுக்கியது)

* முந்திரி - 15

* இஞ்சி - 2 இன்ச்

* வரமிளகாய் - 4-5

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து மூடி 5 நிமிடம் வேக வைக்கவும்.

* பொருட்கள் நன்கு வெந்ததும், அதை இறக்கி, குளிர வைத்து, பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கருஞ்சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.


* பின்பு அரைத்த மசாலாவை ஊற்றி, கிரேவிக்கு தேவையான அளவு நீர் மற்றும் உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

* கிரேவி நன்கு கொதித்து ஓரளவு கெட்டியாகும் போது, கரம் மசாலா, காய்ந்த வெந்தய கீரை இலைகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.

* இறுதியில் பன்னீர் துண்டுகளைப் போட்டு கிளறி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் முந்திரி கிரேவி தயார்!

No comments:

Post a Comment