Zucchini puree (சுரைக்காய் கூழ்)
வயது குழந்தையின் 7 வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையானவை:
சுரைக்காய்- பாதியளவு
பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் ஒரு சிட்டிகை
செய்முறை:
1. சுரைக்காயை நன்றாக கழுவி தோலை சீவீக்கொள்ளவும்.
2. இதனை சிறு சிறு துண்டுகளாக்கி பிரஷர் குக்கரில் பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேக
வைக்கவும்.
3. மிதமான தீயில் 2 விசில் வேகவீட்டு ஆறிய பிறகு அதனை மசித்துக் ள்ளுங்கள்.
4. இத்துடன் சீரகத்தூள் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
அலர்ஜியை ஏற்படுத்தாத தன்மை கொண்ட சரியான உணவு இது, பிஞ்சான சுரைக்காயை வாங்குங்கள். காயின் மேல்பகுதியில் கரும்புள்ளிகள்; கறைகள் இல்லாமல்
பிரெஷ்ஷான காயை வாங்குவது நல்லது. இதில் 90 சதவீதம் தண்ணீர் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும் தன்மை
உள்ளது.
மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் காய் இது.
இதி்ல் கால்சியம், மக்னீசியம் மற்றும் வைட்டமிள் ஏ. சி உள்ளிட்ட பல்வேறு சத்துகள் இருக்கின்றன. “இதில் 90 சதவீதம் தண்ணீர் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு
எளிதில் ஜீரணமாகும் தன்மை உள்ளது”
No comments:
Post a Comment