Carrots (கேரட்)
உருளைக்கிழங்கு கூழ்
வபது - குழந்தையின் 5 வது மாதத்தின் இருந்து தரலாம்
வேகவைத்து மசித்த கேரட், உருளைக்கிழங்கு :
தேவையானவை:
கேரட் - 1 (நடுத்தர அளவிலானது)
* உருளைக்கிழங்கு - 1 (நடுத்தா அளவிலானது)
* ஓமம் .அல்லது சீரசுப்பொடி - ஒரு சிட்டிகை
செய்முறை :
1. கேரட், உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவிக் கொள்ளவும்.
2. இதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
3. ஒரு பாத்திரத்தில் இதனை வைத்து பிரஷர் குக்கரில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு அதற்குள் இதை வைத்து 2 முதல் 3 வீசிஸ் வரை வேகவிடவும்.
4. நன்றாக வெந்த இதனை கைகளால் மசித்தோ மிக்ஸியில் அரைத்தோ கொடுக்கலாம்.
5. சுவைக்காக ஓமம் அல்லது சீரகப்பொடி சேர்த்துக் கொள்ளலாம்.
6. குழந்தை எளிதாக சாப்பிட தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்துக் கொள்ளலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
உங்கள் குழந்தைக்கு ஏற்ற உணவு கேரட் என்பதால் இதனை 5 வது மாதத்தில் இருந்து கொடுக்கலாம்.
கடைகளில் கேரட்டை வாங்கும்போது கறைகள், கீறல்கள் இல்லாமல் பார்த்து வாங்குங்கள்.
No comments:
Post a Comment