Yellow Pumpkin Paratha- Sprouted Moong Taal (மஞ்சள் பூசணி பராத்தா- ஸ்பிரௌட்டடு மூங்க் தால் )
மஞ்சள் பூசணி பராத்தா
தேவை: மஞ்சள் பூசணித் துருவல் - 1 கப், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கி வைக்கவும்), நெய் - 1 டேபிள் ஸ்பூன்.
மேல் மாவிற்கு: கோதுமை மாவு - 1 கப், ஓமம் - 1/2 டீஸ்பூன், உப்பு
தேவையானது, நெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை: முதலில் மேல் மாவிற்குப் பிசைந்து மூடி வைக்கவும்.
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டுச் சூடானதும் துருளிய
மஞ்சள் பூசணி, மிளகாய்த்தூள், இஞ்சித்துருவல், மல்லித்தழை, நறுக்கிய
பச்சைமிளகாய், உப்பு சேர்த்துக் கிளறவும். ட்ரை ஆனதும் அடுப்பை அணைக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். பிசைந்து வைத்திருக்கும் மாவில் இருந்து ஒரு உருண்டை எடுத்து. சிறு வட்டமாக இடவும். நடுவில் பூசணிக்காய்க் கலவையை வைத்து மூடித் திரும்பவும் இடவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, அதில் பராத்தாவைப் போட்டு, இருபுறமும் சுற்றி நெய் விட்டு வேக விட்டு எடுக்கவும். சுவையான மஞ்சள் பூசணி பராத்தா ரெடி.
No comments:
Post a Comment