கூட்டாஞ்சோறு
தேவையான பொருட்கள்
- பச்சரிசி 200 கிராம்
- துவரம்பருப்பு 100 கிராம்
- கத்தரிக்காய்
- வாழைக்காய்
- முருங்கைக்காய் -2
- பரங்கிக்காய்
- மிளகாய் பொடி 2 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி 100 கிராம்
- பச்சைமிளகாய் -2
- இஞ்சி ஒரு சிறிய துண்டு
- பூண்டு 2 பல்
- உப்பு -அரை டீஸ்பூன்
- புளி
- எண்ணெய் தேவையான அளவு
- கடுகு கறிவேப்பிலை
செய்முறை
அரிசி, பருப்பு, காய்கறி ஆகியவற்றுடன் ஒன்றரை மடங்கு தண்ணீர் சேர்த்து புளிக்கரைசல், மிளகாய் பொடி. மஞ்சள்பொடி, மல்லிப்பொடி, உப்பு, தோல்நீக்கி சுத்தப்படுத்திய இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து கொதிக்க விடவும்.
வெந்தவுடன் இறக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகை வெடிக்கவிட்டு அதனுடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கிளறி சூடாக சாப்பிடவும். இந்த கூட்டாஞ்சோறு மதுரை ஸ்பெஷல்.
இந்த கூட்டாஞ்சோறுக்கு தொட்டுக்கொள்ள அப்பளம் அல்லது வற்றல் சுவையாக இருக்கும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்த பொரியலும் நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment