புடலங்காய் வறுவல்
தேவையான பொருட்கள்
- புடலங்காய் 16
- அரிசி மாவு 500 கிராம்
- மைதா மாவு - 1 கைப்பிடி
- கடலை மாவு 1 கைப்பிடி
- இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- மிளகாய் பொடி - 1 கைப்பிடி
- மஞ்சள்பொடி - 1 டீஸ்பூன்
- மல்லிப் பொடி 2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை சிறிதளவு
- உப்பு - சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
- புளி தேவையான அளவு
செய்முறை
மாவு வகைகள், பொடி வகைகள், பூண்டு இஞ்சி விழுது, உப்பு அனைத்தையும் கலந்து புளித்தண்ணீருடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளலாம். புளித் தண்ணீருக்குப்பதிலாக எலுமிச்சை சாறு விட்டும் அரைக்கலாம்.
பேஸ்ட் போல் அரைக்கவும்.
புடலங்காயை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக
நறுக்கி அதனுடன் பேஸ்ட்டைப் போட்டு பிசிறவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
எண்ணெய் காய்ந்தவுடன் அதில் பிசிறிய புடலங்காயைப் போட்டு பொறித்து எடுக்கவும். கரகரப்பாக பொறியும்போது இறக்கி வறுத்த கறிவேப்பிலையை
சேர்த்து பரிமாறவும்.
புடலங்காய் வறுவல் மிகவும் ருசியாக இருக்கும்.
சாப்பாட்டிற்கும் தொட்டுக் கொள்ளலாம். டிபன் போலவும் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment