Vegetable soup ( காய்கறி சூப் )
வயது - குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையானவை:
* நறுக்கிய காய்கறிகள் -
நெய் ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
• மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
.
பூண்டு - 2 பல்
* நறுக்கிய வெங்காயம் - பாதியளவு
* நறுக்கிய தக்காளி - பாதியளவு
செய்முறை:
1. குக்கரில் நெய்யை ஊற்றி சூடுபடுத்தவும்.
2. இத்துடன் சீரகத்தை சேர்த்து பொறிந்து வரும் வரை விடவும். 3. இத்துடன் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. பின் தக்காளியையும் சேர்த்து கருளும் வரை வதக்கி விடுங்கள்,
5. மஞ்சள் தூள் மற்றும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து பிரஷர்
குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
6. இறக்கிய பிறகு ஆறவைத்து இத்துடன் கொத்தமல்லி இழை தூவி மிக்ஸியில் அரைத்துக்
கொள்ளுங்கள். 7. முதலில் குழந்தைகளுக்கு காய்சுறி சூப்பை தரும் போது வேகவைத்த நீரை மட்டும் கொடுங்கள். சில நாட்களுக்கு பிறகு காய்கறிகளையும் சேர்த்து நன்றாக அரைத்து கொடுங்கள்.
8. இந்த காய்கறிகளை எல்லாம் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்றாக வேகவைத்து கொடுக்கவும். இதளை வறுக்க வேண்டாம். மேலும் காய்கறிகளை கருக விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
குழந்தைகளுக்கு காய்களை கொடுப்பதற்கு முன் அலாஜி ஏதேனும் இருக்கிறதா என்பதை சோதனை செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு பிடித்தமான காய்கறிதானா என்பதையும் சுவனத்தில் கொள்ளுங்கள்.
ஒரு கப்பில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, சுரைக்காய், புடலங்காய், பரங்கிக்காய்,பீர்க்கங்காய்,
பாலக்கீரை ஆகிய எல்லா காய்கறிகளும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
கொத்தமல்லி தழையையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்.
"ஒவ்வொரு காய்கறிகளும் தனியாக கொடுத்து அது குழந்தைக்கு ஒத்துக்கொண்ட பிறகே எல்லாவற்றையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்"
No comments:
Post a Comment