Chicken soup (சிக்கன் சூப் )
வயது - குழந்தையின் 7 வது மாதத்தில் இருந்து தரலாம்
தேவையானவை:
சதைப்பற்றுள்ள சிக்கன் துண்டுகள் - 2
வெண்ணெய் - ஒரு ஸ்பூன்
* சீரகம் - அரை டீஸ்பூன்
* தனியா விதை - அரை டீஸ்பூன்
* துருவிய இஞ்சி - சிறிது
* உரித்து நசுக்கிய பூண்டு - 2 துண்டுகள் * நறுக்கிய வெங்காயம் - ஒன்று
• நறுக்கிய தக்காளி - ஒன்று
• மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
1. பிரஷர் குக்கரில் வெண்ணையை சூடாக்கி அதில் சீரகத்தை சேர்த்து தாளிக்கவும். பின் தனியா விதைகளையும் சேர்த்து வதக்கவும்.
2. இதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி வெங்காயத்தையும் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்,
3. பின்னர் தக்காளியை சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
4. இந்த கலவையில் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி 2 முதல் 3 விசில் வரை
வேசு விடுங்கள்.
5. ஆறிய பிறகு இதில் கொத்தமல்லி தழைகளை தூவி பரிமாறவும். 6, 8 மாதங்களுக்கு முன்பு குழந்தைக்கு இதனை கொடுக்கும் போது வேசுவைத்த தண்ணீரை
மட்டும் வடித்து தாலாம்.
7. ஆனால் 8 மாதங்களுக்கு பிறகு இந்த கலவையை நன்றாக அரைத்து குழந்தைக்கு தரவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
அதிகளவிலான புரதச்சத்தும் இரும்புச்சத்தும் நிறைந்த உணவு இது. கோழியின் தொடைப்பகுதியிலும் கால் பகுதியிலும் அதிகமான இரும்புச்சத்துகள் இருப்பதால்
இதனை கொடுப்பது நல்லது.
நாட்டுக்கோழியை வாங்குவது சிறந்தது.
“அதிகளவிலான புரதச்சத்தும் இரும்புச்சத்தும் நிறைந்த உணவு இது"
No comments:
Post a Comment