Vegetable Cutlet - Lavangalatha (வெஜிடபிள் கட்லெட் - லவங்கலதா )
கட்லெட்
தேவை: உருளைக்கிழங்கு- 3, பீன்ஸ் - 50 கிராம், கேரட் - 2, பட்டாணி - 50 கிராம். பீட்ரூட் - 2, கொத்துமல்லி - சிறிதளவு, வெங்காயம் - 3, காரப்பொடி 1 டீஸ்பூன், கரம் மசாலா, மஞ்சள் பொடி தலா 1 டீஸ்பூன், முந்திரி -25 கிராம், நெய் எண்ணெய் கலந்தது - தேவையான அளவு, உப்பு தேவைக்கு.
செய்முறை: முழு உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி ஆகியவற்றை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் உருளைக்கிழங்கைத் தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கிக் கொண்டு அதில் மசித்த உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், பட்டாணி, பீட்ரூட் ஆகியவற்றைப் போடவும். அத்துடன் மஞ்சள் பொடி, காரப் பொடி, மசாலாப் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். இது கெட்டியாக இருத்தல் வேண்டும். இத்துடன் முந்திரிப் பருப்பைப் பொரித்துச் சேர்க்கவும். இறக்கும் சமயத்தில் கொத்துமல்லியைச் சேர்க்கவும்.
கைபொறுக்கும் சூட்டில் நமக்கு வேண்டிய வடிவத்தில் உருண்டை யாகவோ அல்லது நீளவாக்கிலோ செய்யவும். இதை எண்ணெய், நெய்யில் மொறுமொறுவென்று பொரித்து எடுத்துச் சாப்பிடவும்.
No comments:
Post a Comment