லவங்கலதா (lavankalata )
தேவை: ரவை 2 தேக்கரண்டி, மைதா - 2 கப், துருவிய தேங்காய் - 1, கோவா 1/2 கப், சர்க்கரை - 1 1/4 கப், ஏலக்காய்ப் பொடி -2 தேக்கரண்டி, கிராம்பு - 15. உப்பு - 1 சிட்டிகை, நெய் - பொரிப்பதற்குத் தேவையானது.
செய்முறை: மைதா மாவில் தேவையான அளவு வெந்நீர், உப்பு சேர்த்து பதமாகப் பிசைந்து ஈரத் துணியால் மூடி வைக்கவும். சர்க்கரையை மூன்று கம்பிப் பாகுக்கு பாகு தயாரிக்கவும். சிறிது நெய் விட்டு ரவையை ப்ரௌன் நிறமாக மாறும்வரை வறுக்கவும். இத்துடன் கோவா, சர்க்கரை, ஏலப்பொடி, தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து அடுப்பை சிறியதாய் வைத்து நன்கு பூரணமாகும்வரை கிளறி இறக்கவும்.
மைதா மாவை சிறு உருண்டைகளாய் உருட்டி, நடுவில் தேவையான
பூரணத்தை வைத்து தபால் கவர் போல் மடித்து கிராம்பைக் குத்தவும். லவங்கலதாவை நெய்யில் பொன்னிறமாய்ப் பொரித்தெடுத்து, பாகில் போட்டு ஒருமணி நேரம் ஊறவிட்டு எடுக்கவும். சூடாகவோ. ஃப்ரிட்ஜில் வைத்தோ, வெஜிடபிள் கட்லட்ஸ் அல்லது சமோசாவுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment