Tanker (டாங்கர் )
தேவை: சின்ன வெங்காயம் - 2 பிடி, தக்காளி (பொடியாக நறுக்கியது) 2, வரமிளகாய் (பொடியாக நறுக்கியது) -6. கறிவேப்பிலை - சிறிது, புளிக் கரைசல் (எலுமிச்சை அளவு)- 1 கப். தாளிக்க : கடுகு - 1 டீஸ்பூன், உடைத்த உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன், பெருங்காயம் - தேவைக்கு, உப்பு -
தேவைக்கு, நெய் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: வாணலியில் நெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும். சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வதக்கவும். பின்பச்சைமிளகாய், வரமிளகாய் சேர்த்து வதக்கவும்,
தக்காளி சேர்த்து வதக்கவும். புளி கரைசல் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். பத்து நிமிடம் சிம்மில் வைத்தால் சுவையான டாங்கர் தயார். இதனை மரவள்ளிக் கிழங்கு அடையுடன் பரிமாறவும்.
No comments:
Post a Comment