Vegetable curry (வெஜிடபிள் கறி ) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday, 24 July 2021

Vegetable curry (வெஜிடபிள் கறி )

Vegetable curry (வெஜிடபிள் கறி )



தேவை: கேரட் - 100 கிராம், பீன்ஸ் - 100 கிராம், பச்சைப் பட்டாணி > 1 கப், காலிஃப்ளவர் - 100 கிராம், உருளைக்கிழங்கு - 2. வறுத்து அரைக்க : காய்ந்த மிளகாய் - 4, பட்டை - 1 சிறு துண்டு,

கிராம்பு - 2. தனியா - 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2. தாளிக்க : சீரகம் -1 டீஸ்பூன், அரிந்த பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 2, குடமிளகாய் அரிந்தது - 1, நெய் - 4 டேபிள் ஸ்பூன், தக்காளி - 2, முந்திரிப் பருப்பு - 10 (இரண்டையும் அரைத்து விழுதாக்கிக் கொள் ளவும்) இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன், தயிர் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: வாணலியில் நெய் சூடாக்கி சீரகம் தாளித்து அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். நீளவாக்கில் நறுக்கி வேசுவைத்த காய்கறிகள், இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த தக்காளி, தயிர் எல்லாம் சேர்த்துக் கலந்து மூடி போட்டு வேக விடவும். எல்லாம் சேர்ந்து கெட்டிக் குழம்பாக வரும் பதத்தில் இறக்கி மேலே சிறிது நெய் விட்டு ஜீரா ரைஸ் உடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment